/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சமூக விரோத கும்பலின் களமாக மாறிய குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம் சமூக விரோத கும்பலின் களமாக மாறிய குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
சமூக விரோத கும்பலின் களமாக மாறிய குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
சமூக விரோத கும்பலின் களமாக மாறிய குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
சமூக விரோத கும்பலின் களமாக மாறிய குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
ADDED : ஜூன் 13, 2025 01:27 AM
ஈரோடு, ஈரோடு, கனிராவுத்தர் குளத்துக்கு, எல்லப்பாளையம் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் கழிவு நீர், மழை நீர் சேகரமாகி, ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். இதனால் அப்பகுதி நிலத்தடி நீராதாரத்துக்கு குளம் முக்கிய பங்காற்றுகிறது.
மாநகராட்சி, சில தனியார் அமைப்புகள் சார்பில் குளத்தை துார்வாரி, கரை அமைத்து, நடைபாதை கற்கள், கைப்பிடி கம்பி அமைத்து, கேட்டும் அமைக்கப்பட்டது. ஆனால், சமூக விரோத கும்பலின் கையில் குளம் மற்றும் சுற்றுப்பகுதி சிக்கிவிட்டது.
இதனால் மது, போதை பொருட்கள் பயன்படுத்துவோர், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, அவ்விடத்தில் மக்களை நடமாட விடுவதில்லை. இதனால் வளாகம் முற்றிலும் மோசமாகி விட்டது.
தொடர் மழையால் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதேசமயம் ஆலை கழிவு, பிற கழிவு, பிளாஸ்டிக் உட்பட பல்வேறு கழிவும் கலந்ததால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம், ஊழியர்கள் மூலம், செத்து மிதந்த மீன்கள், பிளாஸ்டிக் கவர், துணி, பை, பாட்டில் போன்றவற்றை நேற்று அகற்றியது. இன்றும் அப்பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.