ADDED : செப் 02, 2025 01:24 AM
பவானி;பவானியை அடுத்த கீழ்வாணி, இந்திராநகரை சேர்ந்தவர் பழனியம்மாள், 62; இவரின் மகள் ரம்யாஸ்ரீ, 28; கடந்த பிப்., மாதம் நசியனுாரை சேர்ந்த பாலு என்பவருடன் திருமணம் ஆனது. ரம்யாஸ்ரீக்கு மனநிலை சரியில்லை என கணவர் வீட்டார் அனுப்பி விட்டனர்.
இதனால் பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். வேலை தேடி செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.