ADDED : செப் 01, 2025 01:58 AM
பவானி;சித்தோடு அருகே மேட்டுநாசுவன்பாளையம், மணக்காட்டூரை சேர்ந்தவர் புஷ்பா, 48; இரண்டு மகள், ஒரு மகனுடன் குடியிருந்து வருகிறார். மூத்த மகள் பிரேமலதா, 32; திருமணம் ஆகாதவர். பவானியில் பத்திர அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆறு மாதங்களாக உடல் நிலை சரியின்றி வேலைக்கு போகாமல் இருந்தார். நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு சித்தோடு போலீசில், புஷ்பா புகாரளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.