Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து

அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து

அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து

அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து

ADDED : ஜூன் 23, 2025 05:13 AM


Google News
கோபி: கோபி அருகே கரட்டடிபாளையத்தை கடந்து, பிரதான சத்தி சாலையில் புதுவள்ளியாம்பாளையம் பிரிவு உள்ளது. அப்பகு-தியில் சத்தி சாலையின் குறுக்கே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறுபாலம் கட்டமைப்பு பணி நடந்தது. பணி முடிந்த சூழலில், பாலத்தின் கட்டமைப்பும், பிரதான சத்தி சாலையும் இணைத்து சமமாக மேற்கொள்ளவில்லை.

அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் சிதறி, கரடு, முரடாக காணப்படுகி-றது. இதனால் அசுர வேகத்தில் பாலத்தை கடக்கும் வாகனங்-களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை

நிர்வாகம் முறையாக சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us