/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காவேரி ரோட்டில் மேன்ஹோல் சேதம் கம்பியை நட்டு வைத்து அடையாளம் காவேரி ரோட்டில் மேன்ஹோல் சேதம் கம்பியை நட்டு வைத்து அடையாளம்
காவேரி ரோட்டில் மேன்ஹோல் சேதம் கம்பியை நட்டு வைத்து அடையாளம்
காவேரி ரோட்டில் மேன்ஹோல் சேதம் கம்பியை நட்டு வைத்து அடையாளம்
காவேரி ரோட்டில் மேன்ஹோல் சேதம் கம்பியை நட்டு வைத்து அடையாளம்
ADDED : செப் 12, 2025 01:16 AM
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் வழியாக பள்ளிபாளையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வாய்க்கால் பாலத்துக்கு அருகில் உள்ள ஐயப்பன் கோவில் எதிரே, காவேரி ரோட்டின் நடுவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் அமைந்துள்ளது. இது சேதமாகி கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, கம்பி தெரிகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆனால் பணியை செய்யாமல், 5 அடி உயரத்துக்கு இரும்பு கம்பியை சொருகி வைத்து அடையாளம் மட்டும் தந்து சென்றுள்ளனர். ஏதேனும் வாகனங்கள் முந்துவதற்காக பின் தொடர்ந்து வந்து, கம்பி இருப்பது தெரியாமல் வந்தால், நிச்சயம் அந்த வாகனம் விபத்தில் சிக்கும். அசம்பாவிதம் நடக்கும் முன், கம்பியை அகற்றி, உரிய சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்