/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுத்தை தாக்கி பசுமாடு காயம் வனத்துறையினரிடம் வாக்குவாதம் சிறுத்தை தாக்கி பசுமாடு காயம் வனத்துறையினரிடம் வாக்குவாதம்
சிறுத்தை தாக்கி பசுமாடு காயம் வனத்துறையினரிடம் வாக்குவாதம்
சிறுத்தை தாக்கி பசுமாடு காயம் வனத்துறையினரிடம் வாக்குவாதம்
சிறுத்தை தாக்கி பசுமாடு காயம் வனத்துறையினரிடம் வாக்குவாதம்
ADDED : ஜூன் 29, 2025 01:03 AM
சத்தியமங்கலம், ஆசனுார் அருகே அரேபாளையத்தை சேர்ந்த சிவசாமி, ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு அதே பகுதியில் நேற்று விட்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை மேய்ந்து கொண்டிருந்த மாட்டை கழுத்தில் கடித்து தாக்கியது.
கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மற்றவர்கள் கூச்சலிடவே, சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி விட்டது. இதுகுறித்து ஆசனுார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறை அலுவலகத்துக்கு சென்ற மக்கள், வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கால்நடைகளை தொடர்ந்து தாக்கி அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர். மேய்ந்து கொண்டிருந்த மாட்டை சிறுத்தை தாக்கியதை நேரில் பார்த்த மக்கள் பீதியில் உள்ளனர்.