/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பூதப்பாடியில் பருத்தி ஏலம் நேற்று துவக்கம்பூதப்பாடியில் பருத்தி ஏலம் நேற்று துவக்கம்
பூதப்பாடியில் பருத்தி ஏலம் நேற்று துவக்கம்
பூதப்பாடியில் பருத்தி ஏலம் நேற்று துவக்கம்
பூதப்பாடியில் பருத்தி ஏலம் நேற்று துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
பவானி : அம்மாபேட்டை அடுத்த, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று பருத்தி விற்பனை துவங்கியது.
நேற்று நடந்த ஏலத்தில் கொங்கணாபுரம், கோவை, அன்னுார், திருப்பூர், புளியம்பட்டி, இடைப்பாடி ஆகிய இடங்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். மொத்தம், 154 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில், அதிகபட்சமாக கிலோ, 72.19 ரூபாய், குறைந்தபட்சமாக, 63.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, மூன்று லட்சத்து, 63 ஆயிரத்து 112 ரூபாய்க்கு பருத்தி விற்பனை நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், ஞானசேகரன், பவானி ஒழுங்குமுறை மேற்பார்வையாளர்கள் சுப்ரமணியம், சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.