ADDED : மே 25, 2025 12:59 AM
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களை, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அம்ரீத் ஆய்வு செய்தார்.
திண்டல் மலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், சக்தி நகர் ரேஷன் கடை, பெருந்துறை ஆர்.எஸ்., தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு, பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்ககளில் ஆய்வு செய்து, அலுவலர், மக்களிடம் கலந்துரையாடினார். கூடுதல் தேவை, மக்கள் எதிர்பார்ப்பு, சங்கத்தின் புதிய செயல்பாடு பற்றி கேட்டறிந்தார்.