/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்
ADDED : செப் 11, 2025 01:32 AM
சென்னிமலை, சென்னிமலை டவுன் பஞ்., மூன்றாவது வார்டு காந்திநகர் பகுதியில், 15 வது நிதிக்குழு மாநில திட்டத்தில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான பூஜை நேற்று நடந்தது.
சென்னிமலை நகர தி.மு.க., செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீ தேவி அசோக் தொடங்கி வைத்தார். துணை தலைவர் சவுந்தர்ராஜன், மூன்றாவது வார்டு கவுன்சிலர் திலகவதி, பேரூராட்சி தலைமை எழுத்தர் யசோதா உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.