Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொகுதி வாரியாக செல்லும் தபால் ஓட்டு விண்ணப்பம்

தொகுதி வாரியாக செல்லும் தபால் ஓட்டு விண்ணப்பம்

தொகுதி வாரியாக செல்லும் தபால் ஓட்டு விண்ணப்பம்

தொகுதி வாரியாக செல்லும் தபால் ஓட்டு விண்ணப்பம்

தொகுதி வாரியாக செல்லும் தபால் ஓட்டு விண்ணப்பம்

ADDED : மார் 18, 2026 07:49 AM


Google News
ஈரோடு:ஈரோாடு மாவட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், போலீசார், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் ஓட்டு செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளத

இவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர் கூறியதாவது: தபால் ஓட்டு செலுத்துபவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கி, அவர்களது பெயர், விலாசம், வாக்காளர் அடையாள அட்டை விபரம், தபால் ஓட்டுக்கான காரணம், அவருக்கான ஓட்டுச்சாவடி முகவர் விபரம் பதிவு செய்யப்படும். விருப்பம் தெரிவித்த மாற்றுத்திற-னாளிகள், முதியோர்களுக்கு 'பேலட் ஷீட்' வழங்கி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் சென்று, சீல் வைத்த பெட்டியில் ஓட்டுக்-களை சேகரிப்பார்கள்.

அதுபோல போலீசார், அரசு ஊழியர், ஆசிரியர் என தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் பயிற்சியின் போது விண்ணப்பம், ஓட்டுச்சீட்டு வழங்கி, ஓட்டுப்-பெட்டியில் சேகரிக்கப்படும். இவ்வாறு கூறினர்.