/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கொங்கு அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்கொங்கு அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
கொங்கு அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
கொங்கு அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
கொங்கு அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 29, 2024 02:04 AM
ஈரோடு: ஈரோடு நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
பெருந்துறை தி கொங்கு வேளாளர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் தலைவர் டாக்டர் குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் வழிகாட்டுதலின்படி நடந்தது. கொங்கு கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் தங்கவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கோவை, தென்சேரிமலை திருநாவுக்கரசு திருநந்தவனத் திருமடத்தை சேர்ந்த தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி குத்து விளக்கேற்றி, மாணவர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக பிரபல பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசினார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன், விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து விளக்கினார். விழாவில் கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் இளங்கோ, கொங்கு பாலிடெக்னிக் மற்றும் கொங்கு நேச்சுரோபதி அண்ட் ஹோமியோபதி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தாளாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.