ADDED : ஜூன் 21, 2025 12:59 AM
ஈரோடு, கொடுமுடி அருகே சாலைபுதுாரை சேர்ந்த சங்கர் மகள் சர்மிளா, 21; ஈரோட்டில் தனியார் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., படித்து வந்தார். கடந்த, 17ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரது தோழிகளிடம் விசாரித்தபோது, காசிபாளையத்தை சேர்ந்த உசேன் என்ற காதர் பாட்சா, 24, என்பவருடன் சென்று விட்டது தெரிய வந்தது. சங்கர் புகாரின்படி கொடுமுடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.