ADDED : ஜூலை 03, 2025 01:42 AM
கோபி, ஈரோடு கலெக்டராக கடந்த ஜூன், 27ல் பொறுப்பேற்ற கந்தசாமி, கோபி பகுதியில் முதன் முறையாக நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
கோபி யூனியன் ஆபீசில், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின் கோபி நகராட்சியில் செயல்படும் நுாலகம், அறிவுசார் மையம், தோட்டக்காட்டூரில் வீடுகள் சீரமைக்கும் பணி, கோபி யூனியன் ஆபீசில் உள்ள சிமென்ட் இருப்பு கிடங்கு, செங்கலரையில் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், உதவி கலெக்டர் (பயிற்சி) காஞ்சன் சவுத்ரி, கோபி தாசில்தார் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.