/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுவலுாரில் ரூ.1.09 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி விற்பனைசிறுவலுாரில் ரூ.1.09 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி விற்பனை
சிறுவலுாரில் ரூ.1.09 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி விற்பனை
சிறுவலுாரில் ரூ.1.09 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி விற்பனை
சிறுவலுாரில் ரூ.1.09 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி விற்பனை
ADDED : செப் 16, 2025 02:08 AM
கோபி, கோபி அருகே சிறுவலுாரில் நேற்று நடந்த ஏலத்தில், தென்னங்கருப்பட்டி, 1.09 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட் டம், கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 900 கிலோ வரத்தாகி, கிலோ 122 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தென்னங்கருப்பட்டி, கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை கூடுதலாக விற்பனையானது.
வரத்தான அனைத்து தென்னங்கருப்பட்டியும், 1.09 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் முடிந்ததால், 14வது வாரமாக பனங்கருப்பட்டி நேற்றும் வரத்தாகவில்லை என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.