வனப்பகுதி சாலையில் நடந்த துாய்மை பணி
வனப்பகுதி சாலையில் நடந்த துாய்மை பணி
வனப்பகுதி சாலையில் நடந்த துாய்மை பணி
ADDED : ஜூன் 30, 2025 04:21 AM
சத்தியமங்கலம்: சத்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட பண்ணாரி-திம்பம் சாலை, வனப்பகுதி வழியாக செல்கிறது.
இந்த சாலையோரம் சுற்றுலா பயணிகள், மக்கள், பிளாஸ்டிக் பாட்டில், பை, கண்ணாடி பாட்டில் மற்றும் குப்பையை வீசி செல்வது வழக்கமாக உள்ளது. இரை தேடி வரும் விலங்குகள் இவற்றை தின்பதால் உயிரிழப்பு அபாயம் நேரிடுகிறது. இந்நிலையில் இந்த சாலையோரம், 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மக்கள் மற்றும் பயணி-களால் வீசப்பட்ட குப்பையை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்-டனர்.