/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பங்களாவை இடித்ததாக கிறிஸ்தவ அமைப்பு முறையீடுபங்களாவை இடித்ததாக கிறிஸ்தவ அமைப்பு முறையீடு
பங்களாவை இடித்ததாக கிறிஸ்தவ அமைப்பு முறையீடு
பங்களாவை இடித்ததாக கிறிஸ்தவ அமைப்பு முறையீடு
பங்களாவை இடித்ததாக கிறிஸ்தவ அமைப்பு முறையீடு
ADDED : பிப் 06, 2024 10:54 AM
ஈரோடு: பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், சிலோன் அன்ட் இந்தியா ஜெனரல் மிஷன் என்ற கிறிஸ்தவ அமைப்பின் சேர்மன் ஜான் டேவிட்சன், செயலர் விஜயகுமார் மற்றும் பலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது:
எங்கள் மிஷனுக்கு சொந்தமான பழைய பள்ளி கட்டடம், பங்களாக்கள் கோபியில் மொடச்சூர் சாலையில் உள்ளது. இதில் பள்ளி செயல்படாமல் இருந்தது. பங்களாவில் மிஷனுக்கு சொந்தமானவர்கள், விருந்தினர்களாக தங்கி செல்வது, பணி செய்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் இம்மிஷனுடைய குழு, அமைப்புகளாக ஏற்படுத்தி சிலர் செயல்பட்டனர். தற்போது அவர்கள் செயல்பாட்டில் இல்லை. அங்குள்ள பள்ளி கட்டடத்தை தொடர்ந்து பங்களாவையும் இடித்துள்ளனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.