/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதலமைச்சர் கோப்பை:கால்பந்து போட்டி துவக்கம் முதலமைச்சர் கோப்பை:கால்பந்து போட்டி துவக்கம்
முதலமைச்சர் கோப்பை:கால்பந்து போட்டி துவக்கம்
முதலமைச்சர் கோப்பை:கால்பந்து போட்டி துவக்கம்
முதலமைச்சர் கோப்பை:கால்பந்து போட்டி துவக்கம்
ADDED : செப் 01, 2025 01:57 AM
ஈரோடு;ஈரோடு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி, வாய்க்கால்மேடு அருகில் தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.
போட்டியில், 72 பள்ளிகளை சேர்ந்த மாணவ அணிகள் பங்கேற்றுள்ளன. இதேபோல் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்த கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் கந்தசாமி சிறப்பு பரிசு, பதக்கம், கோப்பை வழங்கினார்.