/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி அறிவிப்புமுதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
ADDED : பிப் 24, 2024 03:54 AM
ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச், 1ம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி, மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.,வுக்கு உட்பட்ட மாநகர பகுதி, ஒன்றியம், பேரூர் பகுதிகளில், 103 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட உள்ளது. வரும், 25ல் சோலாரில் கட்சி கொடியேற்றி, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
26ம் தேதி மாவட்ட மகளிரணி சார்பில் திண்டல்; 27ல் மாவட்ட தொண்டரணி சார்பில் வெண்டிப்பாளையம்; 28ல் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் திண்டல் குழந்தைகள் காப்பகம்; 29ல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சூரியம்பாளையம் காது கேளாதோர் பள்ளியிலும் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. மார்ச், 1ல் மாவட்ட மருத்துவரணி சார்பில் அவல்பூந்துறையில் மருத்துவ முகாம் என தொடர்ந்து ஏப்., 29 வரை பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கி, மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.