/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம் ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உலக நன்மைக்காக சண்டியாகம்
ADDED : செப் 30, 2025 01:35 AM
ப.வேலுார், ப.வேலுார், சுல்தான்பேட்டை, ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு, நவராத்திரி விழாவையொட்டி சண்டியாகம் நடத்தப்படுவது வழக்கம். உலக நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் பெறவும், நடப்பாண்டு சண்டியாகம், நேற்று நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு தொடங்கிய சண்டியாகம், மதியம், 12:00 மணி வரை நடந்தது. தொடர்ந்து, ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான
பக்தர்கள் கலந்துகொண்டனர்.


