ADDED : ஜூன் 22, 2024 01:12 AM
கோபி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோபி வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர், யோகா பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர்.
இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, 167 பேர் பயில்கின்றனர். யோகா தினத்தையொட்டி இறைவணக்க கூட்டம் முடிந்ததும், மாணவ, மாணவியர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பத்மாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம் உள்ளிட்ட பயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை அலமேலு, உடற்கல்வி ஆசிரியை பத்மா உடனிருந்தனர்.* பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சார்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணபிரியா தலைமையில் நீதிமன்ற ஊழியர், பெருந்துறை வழக்கறிஞர் சங்க தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் யோகாசனம் செய்தனர். சித்தர்கள் வழி யோகா கல்வியகம் பயிற்றுனர் நல்லசிவம், யோகாசனத்தின் நன்மைகள், பயிற்சி முறைகளை விளக்கினார். யோகா தினத்தை கொண்டாடும் வகையில், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.