/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துப்புரவு பணியாளரை திட்டியவர் மீது வழக்கு துப்புரவு பணியாளரை திட்டியவர் மீது வழக்கு
துப்புரவு பணியாளரை திட்டியவர் மீது வழக்கு
துப்புரவு பணியாளரை திட்டியவர் மீது வழக்கு
துப்புரவு பணியாளரை திட்டியவர் மீது வழக்கு
ADDED : மே 10, 2025 01:17 AM
அந்தியூர், அந்தியூர் அருகே ஒலகடத்தை அடுத்த தாளபாளையம் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் முருகேசன், 55; ஒலகடம் பேரூராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர். ஒலகடம் வாரச்சந்தை பொது கழிப்பிடத்தை முருகேசன் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கழிப்பிடத்துக்கு வந்த, ஒலகடம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த விஜய்யிடம், கழிப்பறையில் தண்ணீர் ஊற்றுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய், முருகேசனை ஜாதி பெயரை சொல்லி திட்டி அடித்தாராம். முருகேசன் புகாரின்படி வெள்ளித்திருப்பூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து, விஜய்யை தேடி வருகின்றனர்.