/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கேண்டீனில் உணவுப்பொருட்கள் விலை அதிகம்கேண்டீனில் உணவுப்பொருட்கள் விலை அதிகம்
கேண்டீனில் உணவுப்பொருட்கள் விலை அதிகம்
கேண்டீனில் உணவுப்பொருட்கள் விலை அதிகம்
கேண்டீனில் உணவுப்பொருட்கள் விலை அதிகம்
ADDED : ஜன 08, 2024 11:15 AM
ஈரோடு: திருப்பூர் போலீஸ் கேண்டீனை விட, ஈரோடு போலீஸ் கேண்டீனில், உணவு, பலகாரங்களின் விலை கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகரில் போலீஸ் கேண்டின் செயல்படுகிறது. அங்கு பொங்கல் ரூ.30, இட்லி 2க்கு ரூ.15, கிச்சடி ரூ.30, வடை ரூ.6, தக்காளி, லெமன், தயிர், மல்லி சாதங்கள் தலா, ரூ.30, காபி, ரூ.12, பூஸ்ட், ஹார்லிக்ஸ், ரூ.14, வெஜ் பிரியாணி, ரூ.30க்கு விற்கப்படுகிறது. போலீசாருக்கு மட்டுமின்றி மக்களுக்கும் இதே விலையில் விற்கப்படுகிறது.
ஆனால் ஈரோடு போலீஸ் கேண்டீனில் காபி ரூ.15, ஹார்லிக்ஸ், பூஸ்ட் ரூ.20, வடை ரூ.7, இட்லி 1 ரூ.10, பொங்கல், கிச்சடி தலா ரூ.35, சாத வகைகள் ரூ.40, வெஜ் பிரியாணி ரூ.50க்கு விற்கப்படுகிறது.இதுபற்றி போலீசார் கூறியதாவது:
போலீஸ் கேண்டீன் ஆயுதப்படை போலீஸாரால் நிர்வாகிக்கப்படுகிறது. திருப்பூரை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அல்ல. ஒரு சரகத்தில் கூட ஒரே மாதிரியான விலையை போலீசாரால் நிர்ணயிக்க முடியவில்லை.
ஈரோடு கேண்டீனில் போலீசாருக்கு ரூ.7க்கும், மக்களுக்கு ரூ.10க்கும் டீ விற்கப்பட்டது. இரண்டு நாட்களாக அனைவருக்கும் ரூ.10க்கு விற்கப்படுகிறது. தினமும் மாஸ்டரை மாற்றுவதால், டீயின் சுவை கேள்விக்குறியாக உள்ளது. போலீசாருக்கு சகாய விலையில் வழங்கப்பட்ட டீ, காபி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு உத்தரவிட்டது யார்? என தெரியவில்லை. எஸ்.பி.,
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.