ADDED : செப் 03, 2025 01:07 AM
அந்தியூர், பர்கூர்மலை கொங்காடையை சேர்ந்தவர் மாரப்பசாமி, 52; இவர் தனது வீட்டுக்கு பின்புறம் புறம்போக்கு நிலத்தில், கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனையில், ௧௦ கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் கொங்காடை ஜெயன்தொட்டியில் சித்திலிங்கம், 48, ஐந்து கஞ்சா செடி வளர்த்து வந்தார். அதையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.