ADDED : ஜூலை 25, 2024 01:19 AM
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் யசோதா.
இவர் கடந்த, 5ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது. பவானிசாகர் போலீசார், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்தி-ரிந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும், 17 வயது சிறுவன் என்பதும், யசோதா வீட்டில் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதை-யடுத்து சிறுவனை கைது செய்து, ஈரோடு சிறுவர் சீர்திருத்த நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.