பவானிசாகர் நீர்மட்டம் 11 அடி உயர்வு
பவானிசாகர் நீர்மட்டம் 11 அடி உயர்வு
பவானிசாகர் நீர்மட்டம் 11 அடி உயர்வு
ADDED : ஜூன் 01, 2025 01:23 AM
பு.புளியம்பட்டி, நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலை மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த ஆறு நாட்களாக நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று நீர்வரத்து, 5,712 கன அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஆறு நாட்களில் அணை நீர்மட்டம், 11 அடி வரை உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம், 81.25 அடி, நீர் இருப்பு, 16.3 டி.எம்.சி.,யாக இருந்தது. கடந்தாண்டு இதே நாளில் அணை நீர்மட்டம், 54 அடியாக இருந்தது.