ADDED : ஜூலை 13, 2024 08:09 AM
ஈரோடு: ஈரோடு அருகேயுள்ள பெருமாள் மலை கோவில், 1,500 ஆண்-டுகள் பழமையானதாகும்.
வைணவ நெறிப்படி இங்கு பூஜைகள் நடக்கின்றன. ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தான இக்-கோவில் கும்பாபிஷேகம், 1926ம் ஆண்டு ஆவணி மாதம், 25ம் தேதி நடந்துள்ளது.இந்நிலையில், 98 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு கும்-பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல் பணியான பாலாலயம் எனப்படும் திருப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் யாகம் வளர்த்து, பூஜைகள் நடந்தன. இதில் அமைச்சர் முத்துசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாநகர தி.மு.க., செயலாளர் சுப்பிரம-ணியன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.