ADDED : ஜூன் 22, 2025 01:20 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், காங்கேயத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருப்பூர் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட (பொறுப்பு) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., வெற்றிவேந்தன் வரவேற்றார். அரசு சிறப்பு வக்கீல் மனோகரன், அரசு உதவி வக்கீல் இந்துமதி, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை தடுப்பது குறித்தும், தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருதல் குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காங்கேயம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம், மகளிர் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி, போலீசார் மற்றும் மக்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.