துணைத்தேர்வுகளின் வினாத்தாள் வருகை
துணைத்தேர்வுகளின் வினாத்தாள் வருகை
துணைத்தேர்வுகளின் வினாத்தாள் வருகை
ADDED : ஜூன் 21, 2024 07:35 AM
ஈரோடு: பத்தாம் வகுப்பு, பிளஸ் ௧, பிளஸ் ௨ பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, துணைத்தேர்வு நடக்கவுள்ளது.பிளஸ் 2க்கு 24ம் முதல் ஜூலை 1; பிளஸ் 1க்கு ஜூலை 2 முதல் ஜூலை 9; பத்தாம் வகுப்புக்கு ஜூலை 2 முதல் ஜூலை 8 வரை நடக்கவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு, ஈரோடு காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி அமலா மெட்ரிக் பள்ளி, சத்தி சாரு மெட்ரிக் பள்ளி என நான்கு மையங்களில் நடக்கிறது. பிளஸ் 1க்கு ஈரோடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது.இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு வந்தடைந்தது. ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டு காப்பு மைய அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.