/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நந்தா பல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலை விழா நந்தா பல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலை விழா
நந்தா பல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலை விழா
நந்தா பல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலை விழா
நந்தா பல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலை விழா
ADDED : ஜூன் 06, 2025 01:06 AM
ஈரோடு, ஈரோடு நந்தா பல் மருத்துக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் வகையில், இரண்டு நாட்கள் கொண்ட கலைத்திருவிழா-2025 நடந்தது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். ஜே.கே.கே.என் பல் மருத்துக்கல்லுாரி முதல்வர் தனசேகர் பாலகிருஷ்ணன், ஈரோடு டி.எஸ்.பி., வேலுமணி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், செயலர் நந்தகுமார் பிரதீப், மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். மருத்துவமனை முதல்வர் ராஜ்திலக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதை தொடர்ந்து குழு மற்றும் தனி நபர் நடனம், ஆடல், பாடல், ஆடை அலங்காரம் போன்ற பல்வேறு போட்டிகளில், 280க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.