/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் முறையீடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் முறையீடு
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் முறையீடு
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் முறையீடு
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் முறையீடு
ADDED : மே 10, 2025 01:16 AM
சென்னிமலை, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கத்தின் சார்பில், பெருந்துறை சிப்காட்டில் உள்ள, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவிடம், மாசு தடுப்பு தொடர்பாக, நேற்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மாசு கட்டுப்பாடு வாரியத்தால், 2023ல் அமைக்கப்பட்ட தலா மூன்று பேர் கொண்ட 10 ஆய்வுக் குழு ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரை அடிப்படையில், சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தற்போது இருப்பில் உள்ள திடக்கழிவு, கலப்பு உப்பு, அபாயகர கழிவுகளின் அளவு, விபரங்களை தொழிற்சாலைகள் வாரியாக தெரிவிக்க வேண்டும். சிப்காட் நல்லா ஓடையில் வெளியேறும் கழிவு/கசிவு நீர் தினசரி, 50 லாரி அளவுக்கு குறைந்துள்ளதாக அறிகிறோம்.
இந்நிலையில் குட்டப்பாளையம் அருகே சிப்காட் வளாகத்தில் உள்ள பசுமை நிலப் பகுதிகளில் இருந்து மாசடைந்த நிலத்தடி நீரை வெளியேற்றி, லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு வழங்கும் நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளனர்.