Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ADDED : ஜூலை 05, 2024 02:53 AM


Google News
பொன்னாபுரத்தில் 2ம் நாளாக

விவசாயிகள் போராட்டம்

தாராபுரம், ஜூலை 5-

தனியார் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் நடத்திய போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரம் பகுதியில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில், தனியார் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும், மாலை, 4:00 மணி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சா பதுக்கிய வழக்கில்

மேலும் நான்கு பேர் கைது

ஈரோடு, ஜூலை 5-

ஈரோட்டை அடுத்த மேட்டுக்கடை, சாணார்பாளையத்தில் ஒரு வீட்டில், வெள்ளோடு போலீசார், 75 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு, சூரம்பட்டி, பாரதிநகர் முருகேசன், 31, சரவணன், 29. கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, 27, தினேஷ், 29, ஆகியோரை, ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். ---வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாடு திருடிய 4 பேர் கைது

காங்கேயம், ஜூலை 5-

வெள்ளகோவில் அருகே பொன்பரப்பியை சேர்ந்தவர் பிரதீப் குழந்தைவேல், 33; இவருக்கு சொந்தமாக ஓலப்பாளையம் அருகே நெடுங்காட்டு தோட்டத்தில், 25 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு, 50 செம்மறி ஆடுகள், 13 மாடுகளை வளர்த்து வருகின்றார். கடந்த வாரம் நான்கு மாடுகள் திருட்டு போனது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார்

தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆனைமலை அருகேயுள்ள திவான் சாலைபுதுார் மகாபிரபு, 23, சந்துரு, 21, ஜெயசூர்யா, 19; வெள்ளகோவில், தென்னகரப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், 42, என நான்கு பேரை கைது செய்தனர். திருடப்பட்ட மாடுகளை கைப்பற்றி, திருட்டுக்கு பயன்படுத்திய மினி வேன், பைக்கை பறிமுதல் செய்தனர். நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, கோவை மத்திய சிறையில்

அடைத்தனர்.

காரில் திருடிய இருவர் கைது

பெருந்துறை, ஜூலை 5-

பவானியை சேர்ந்தவர் செல்வராஜ், 47; குமாரபாளையத்தில் இருந்து பெருந்துறை சிப்காட்டுக்கு, காரில் சென்றார். சோளிபாளையத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வந்தபோது, காரின் கண்ணாடியை உடைத்து, இரு லேப்டாப், பேங்க் லாக்கர் கீ மற்றும் காருக்குரிய ஆவணங்கள் திருட்டு போனது தெரிந்தது.

இதுகுறித்து புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரித்து வந்தனர். பவானி, தொட்டிபாளையம், மோளகவுண்டன்புதுாரை சேர்ந்த ராஜா, ௨௫; சேலம், நெய்க்காரபட்டியை சேர்ந்த கவுரிசங்கர், 41, ஆகியோரை நேற்று கைது

செய்தனர்.

அரசு பள்ளிக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் இலவச பஸ்

படியூர் ஊராட்சி மன்ற தலைவர் அசத்தல்

காங்கேயம், ஜூலை 5-

காங்கேயம் அருகேயுள்ள படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாத பகுதிகளில் இருந்து மாணவர்கள் நடந்தும், சைக்கிள்களிலும் வந்து செல்கின்றனர். இதனால் பல மாணவர்கள், பள்ளிக்கு வர தயக்கம் காட்டினர்.

இதற்கு தீர்வு காணும் விதமாக, படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், தனது சொந்த செலவில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக பஸ்சை வாங்கி, பள்ளிக்கு வழங்கினார். இந்த பஸ் சேவை நேற்று தொடங்கியது. அமைச்சர் சாமிநாதன் சேவையை துவக்கி வைத்து, மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார். பஸ்சில் நான்கு 'சிசிடிவி' கேமராக்கள், ஜி.பி.எஸ்., கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

படியூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் ஒரு நாளைக்கு, நான்கு முறை இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்சியில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன். தி.மு.க., அமைப்பு சாரா அணி மாவட்ட நிர்வாகி சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து

கொண்டனர்.

ஈரோடு கால்நடை சந்தையில்

90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு, ஜூலை 5-

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடக்கும். நேற்று முன்தினம் நடந்த சந்தையில், நுாற்றுக்கும் மேற்பட்ட கன்றுகள், மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவை, 8,000 ரூபாய் முதல், 26,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் இருந்து மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர்.

இதில், 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள்; 36,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள்; 28,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; தவிர, 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், கலப்பின மாடுகளும் விற்பனைக்கு கொண்டு

வரப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். நேற்று வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கீழ்பவானியில் பணி துவங்காவிட்டால்

நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை

ஈரோடு, ஜூலை 5-

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்: 60க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையாணையை விலக்க அரசு நடவடிக்கை எடுத்து, சீரமைப்பு பணியை துரிதமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும். பவானிசாகர் அணையில் நீர் இருப்புக்கு ஏற்ப, 3 பாசனங்களுக்கும் ஒரே அரசாணையில் சம காலத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். பவானிசாகர் அணை அருகே குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுப்பதை கைவிட வேண்டும்.

நீதிமன்றத்தில் உரிய வழிகாட்டுதல் பெற்று, கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை, வரும், 10ல் துவங்க வேண்டும். அல்லது வரும் 11ல் நீர் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 138 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 63.56 ரூபாய் முதல் 76.20 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், ௩.௧௪ லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார். இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 329 மூட்டைகள் வந்தன. இதில் காய்ந்த நிலக்கடலை கிலோ, 67.69 - 78.12 ரூபாய் வரை, 7.97 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. கறவை, கலப்பின மாடுகள், எருமை, கன்றுகள் உள்பட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நேற்று கூடிய சந்தைக்கு, 10 எருமை, 200 கலப்பின மாடு, 80 கன்றுகள், 220 ஜெர்சி மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமைகள் 20-32 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 23-49 ஆயிரம், சிந்து, 20-44 ஆயிரம், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை, விற்றது. வளர்ப்பு கன்றுகள் 6,000 முதல், 15 ஆயிரம் வரையும் விற்பனையானது. அதேபோல், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ வெள்ளாடு ஒன்று, 7,000 ரூபாய் வரை, 10 கிலோ செம்மறி ஆடுகள், 6,500 ரூபாய் வரையும் விற்பனையானது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 52 ரூபாய், நேந்திரன், 40 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 670, தேன்வாழை, 710, செவ்வாழை, 1,200, ரஸ்த்தாளி, 630, பச்சைநாடான், 460, ரொபஸ்டா, 500, மொந்தன், 410 ரூபாய்க்கும் விற்றது.

ஈரோடு:ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் இயங்குகிறது. இங்கு உதவி செயற்பொறியாளராக, ஊரக வளர்ச்சி துறை கோபி அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு, 45, கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். கோபியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் கோவையை சேர்ந்தவர். ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி பணிகளை, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, கமிஷன் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராஜேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 10 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. மோகன் பாபுவிடம் இருந்து, 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக மோகன்பாபு மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us