/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாநில துணை தலைவர் மணிமாலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடந்த, 2023 மத்திய அரசின் பட்ஜெட்டில், அங்கன்வாடி திட்டத்-துக்கு, 2022ல் ஒதுக்கிய நிதியை விட, 300 கோடி ரூபாய் குறை-வாக ஒதுக்கியது.
அடுத்த பட்ஜெட்டில் அங்கன்வாடி திட்டத்துக்-கான நிதியை, இரட்டிப்பாக்க வேண்டும். வாடகை மையங்க-ளுக்கு, சொந்த கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். அங்கன்-வாடி மையங்களில் முன்பருவ கல்வியை வலுப்படுத்தி, மேம்ப-டுத்திட வேண்டும். எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., வகுப்புகளை அங்கன்-வாடி ஊழியர்களே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை கிரேடு-3, கிரேடு-4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியமாக, 26,000 ரூபாய், 18,000 ரூபாய் மற்றும் ஓய்வூதியம், 10,000 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்தை எந்த சூழலிலும் தனியா-ருக்கு வழங்கக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியு-றுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.