/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செங்கோட்டையனை சந்தித்த அ.ம.மு.க.,வினர் - வியாபாரிகள் செங்கோட்டையனை சந்தித்த அ.ம.மு.க.,வினர் - வியாபாரிகள்
செங்கோட்டையனை சந்தித்த அ.ம.மு.க.,வினர் - வியாபாரிகள்
செங்கோட்டையனை சந்தித்த அ.ம.மு.க.,வினர் - வியாபாரிகள்
செங்கோட்டையனை சந்தித்த அ.ம.மு.க.,வினர் - வியாபாரிகள்
ADDED : செப் 12, 2025 02:04 AM
கோபி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே குள்ளம்பாளையத்தில், பண்ணை வீட்டில் தங்கியுள்ள, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பார்க்க, நேற்று காலை முதல் அவரது ஆதரவாளர்கள், சசிகலா, ஓ.பி.எஸ்., மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
கோபி காய்கறி, பழ மார்க்கெட்டில் உள்ள, 165 கடைக்காரர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு, செங்கோட்டையனை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.
மார்க்கெட்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு செங்கோட்டையன் தீர்வு காண உதவியதால், அவரை சந்தித்ததாக தெரிவித்தனர்.அரியலுார் மாவட்டத்தில் இருந்து ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எனக்கூறி, 50க்கும் மேற்பட்டோர் வந்து சந்தித்து சென்றனர். திருப்பூர் மாவட்ட அ.ம.மு.க., மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சண்முகவேல் தனது ஆதரவாளர்களுடன் வந்து சந்தித்தார். வீட்டில் உள்ள அறையில் நிர்வாகிகளை சந்தித்த செங்கோட்டையன், வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. வழக்கமாக செய்தியாளர்களை சந்திப்பார். நேற்று அவ்வாறு சந்திக்கவுமில்லை.