/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஏ.ஐ.டி.யு.சி., உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டம்ஏ.ஐ.டி.யு.சி., உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டம்
ஏ.ஐ.டி.யு.சி., உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டம்
ஏ.ஐ.டி.யு.சி., உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டம்
ஏ.ஐ.டி.யு.சி., உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டம்
ADDED : ஜூன் 22, 2024 01:10 AM
பெருந்துறை: ஏ.ஐ.டி.யு.சி., ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க நிர்வாக குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணைத் தலைவர் ஸ்டாலின் சிவகுமார், சங்க மாவட்ட செயலாளர் மணியன், துணைத் தலைவர் மூர்த்தி, துணைச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.உள்ளாட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 10ம் தேதி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.