/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஞ்., அலுவலக கட்டடம் திறப்பில் பஞ்சாயத்து பூட்டை உடைத்து திறந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பஞ்., அலுவலக கட்டடம் திறப்பில் பஞ்சாயத்து பூட்டை உடைத்து திறந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
பஞ்., அலுவலக கட்டடம் திறப்பில் பஞ்சாயத்து பூட்டை உடைத்து திறந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
பஞ்., அலுவலக கட்டடம் திறப்பில் பஞ்சாயத்து பூட்டை உடைத்து திறந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
பஞ்., அலுவலக கட்டடம் திறப்பில் பஞ்சாயத்து பூட்டை உடைத்து திறந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ADDED : செப் 23, 2025 02:09 AM
பவானி, பவானி அருகே பஞ்சாயத்து அலுவலக கட்டடத்தை, அமைச்சர் திறந்து வைக்க தேதி அறிவித்த நிலையில், பவானி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பூட்டை உடைத்து திறந்து வைத்தது,
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி யூனியன் ஒரிச்சேரி பஞ்சாயத்துக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அலுவலக கட்டடம் கடந்த ஏப்., 4ல் கட்டி முடிக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு திறக்காமல் பூட்டி கிடந்த நிலையில், வரும், 26ம் தேதி அமைச்சர் முத்துசாமி திறந்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் பவானி, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,கருப்பணன், கட்டட பூட்டை உடைத்து நேற்று முன்தினம், திறந்து வைத்துள்ளார். இச்சம்பவம் உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: பஞ்., அலுவலக கட்டடத்தை வரும், 26ம் தேதி அமைச்சர் திறந்து வைப்பார் என்று முறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பவானி எம்.எல்.ஏ.,கருப்பணன், பவானி பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி, அவசர அவசரமாக திறந்து வைத்துள்ளார். இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., கருப்பணன் கூறியதாவது: கட்டடம் கட்டி முடித்து நான்கு மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. கட்டடத்தை திறந்து வையுங்கள் என எங்கள் கட்சியினரும் கூறினர். அதன் பின்னரே கட்சியினர், கான்ட்ராக்டருடன் திறந்து வைத்தோம். கலெக்டர், அமைச்சர் வந்து திறந்து வைப்பார்கள் என்று எனக்கு எந்த தகவலும் இல்லை.
இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ''ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் யாருக்கும் எந்த தகவலும் சொல்லாமல் எம்.எல்.ஏ., கட்டடத்தை திறந்து வைத்து விட்டார். அவர் திறந்த பிறகே எங்களுக்கு தகவல் வந்தது. கட்டடத்தின் பூட்டை உடைத்து திறந்து வைத்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். கட்டடத்துக்கான சாவி பஞ்., கிளார்க்கிடம் உள்ளது. தற்போது புதிய பூட்டை போட்டுவிட்டு, அந்த சாவியை அவர்கள் தான் வைத்துள்ளார்கள். இதுசம்பந்தமாக நடவடிக்கை வேண்டி, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன்,'' என்றார்.