/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு பணி துவக்கம்பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு பணி துவக்கம்
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு பணி துவக்கம்
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு பணி துவக்கம்
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு பணி துவக்கம்
ADDED : பிப் 24, 2024 03:53 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை பதிவு செய்யும் பணி துவங்கியது.
தமிழகத்தில், 37,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள், பள்ளி கல்வித்துறையின் 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்கின்றனர். அதில் மாணவர், பெற்றோர் விபரம், முகவரி, ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் அரசு பள்ளி மாணவர்களில் பலருக்கு ஆதார் எண் இல்லாதது தெரிய வருகிறது. இதனால் தகுதி இருந்தும், அரசின் திட்ட பலன்கள், உயர் கல்விக்கான உதவித்தொகை, வங்கி கணக்கு துவங்குதல் போன்ற பணி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் பள்ளி கல்வித்துறை சார்பில், ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் யூனியனுக்கு ஒரு இடம் என, 14 யூனியனில் அரசு பள்ளிகளில் ஆதார் பதிவு முகாம் நேற்று நடந்தது.
ஈரோடு யூனியனுக்காக, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் முகாம் நடந்தது. நிறைவு தேதி அறிவிக்காமல் தொடர்ந்து முகாம் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.