/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குண்டடம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கணும் குண்டடம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கணும்
குண்டடம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கணும்
குண்டடம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கணும்
குண்டடம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கணும்
ADDED : ஜூன் 21, 2025 01:18 AM
தாராபுரம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் முத்து ரத்தினம் பேசுகையில், 'ஊதியூர் பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில், சோதனைக்காக வெடி வெடிக்கும் நீரை வெளியேற்றுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் மற்றும் கிணற்று நீர் பாதிக்கப்பட்டு மாசு ஏற்படுகிறது. அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். மற்றொரு விவசாய சங்க பிரதிநிதி, 'சாலை விரிவாக்க பணிக்காக குண்டடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.