/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒற்றை யானையால் வெள்ளித்திருப்பூரில் அச்சம் ஒற்றை யானையால் வெள்ளித்திருப்பூரில் அச்சம்
ஒற்றை யானையால் வெள்ளித்திருப்பூரில் அச்சம்
ஒற்றை யானையால் வெள்ளித்திருப்பூரில் அச்சம்
ஒற்றை யானையால் வெள்ளித்திருப்பூரில் அச்சம்
ADDED : மே 10, 2025 01:30 AM
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே பத்து நாட்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை, விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன், தாக்கவும் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெள்ளித்திருப்பூர் அருகே மோத்தங்கல்புதுார் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில், பத்து நாட்களுக்கும் மேலாக, இரவில் ஒற்றை ஆண் யானை நடமாடுகிறது. பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. விவசாயிகள் விரட்ட முயன்றால் துரத்தி தாக்க முயல்கிறது. இது தவிர தோட்டத்து பகுதியில் வீட்டை சுற்றி வளர்க்கப்படும் வாழை மரங்களையும் விடுவதில்லை. நேற்று காலை, 9:௦௦ மணிக்கு, ஒரு வீட்டருகே இருந்த வாழை மரங்களை முறித்து தின்று கொண்டிருந்தது. மக்களின் தகவலின்படி வந்த சென்னம்பட்டி வன ஊழியர்கள், மக்களுடன் சேர்ந்து ஒரு மணி நேரம் போராடி, வனத்துக்குள் விரட்டினர்.
கடந்த, ௧௦ நாட்களில் ஐய்யன்தோட்டத்தை சேர்ந்த ராஜா, சோமு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் நுாற்றுக்கணக்கான வாழை, எலுமிச்சை மற்றும் கரும்பை தின்று சேதம் செய்துள்ளது. ஊருக்குள் நடமாடும் யானையை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, பொதுமக்கள் பயத்துடன் இருக்கின்றனர்.