/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலிவேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி
வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி
வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி
வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி
ADDED : ஜன 06, 2024 07:28 AM
அந்தியூர்: -அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 24; அந்தியூர் வனப்பகுதி தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்.
சமீபத்தில் திருமணம் ஆனது. மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து, மற்றொரு வேட்டை தடுப்பு காவலரான கவின், 24, என்பவருடன், ஸ்பிளெண்டர் பைக்கில் வீட்டுக்கு சென்றனர். மந்தை - அந்தியூர் சாலையில், பொய்யேரிக்கரை அருகே சென்றபோது, பின்னால் எக்ஸல் மொபட்டில் வந்த, மந்தை பகுதியை சேர்ந்த வேலுசாமி டூவீலர் மீது மோதியதில், இருவரும் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.அந்தியூர் அரசு மருத்துவமனையில் கவினும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் லோகநாதனும் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த லோகநாதன், நேற்று காலை இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.