/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தோட்டத்தில் விபரீதம் லாரி ஏறி சிறுமி பலிதோட்டத்தில் விபரீதம் லாரி ஏறி சிறுமி பலி
தோட்டத்தில் விபரீதம் லாரி ஏறி சிறுமி பலி
தோட்டத்தில் விபரீதம் லாரி ஏறி சிறுமி பலி
தோட்டத்தில் விபரீதம் லாரி ஏறி சிறுமி பலி
ADDED : பிப் 11, 2024 01:07 AM
சிவகிரி:கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், வடமலையனுாரை சேர்ந்த மோகன் - மங்கை தம்பதியின் மகள் கீர்த்திகா, 7. ஒரு வாரத்துக்கு முன் கரும்பு வெட்ட, ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதிக்கு குடும்பத்துடன் மோகன் வந்தார்.
சின்னியம்பாளையத்தில், கோனகாடு தோட்டத்தில் தம்பதி நேற்று முன்தினம் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதி அருகே லாரி வரும் பாதையில், சிறுமி கீர்த்திகா கரும்பு சோகையால் முகத்தை மூடி படுத்து துாங்கினார்.
அப்போது கரும்பு ஏற்ற பின்னோக்கி வந்த லாரி, கரும்பு சோகை என நினைத்து, சிறுமி மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி பலியானார்.
சிறுமி உடலை கைப்பற்றிய சிவகிரி போலீசார் லாரி டிரைவரான திருக்கோவிலுாரைச் சேர்ந்த அசோகன், 53, மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.