/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு மாவட்டத்தில் 9 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்ஈரோடு மாவட்டத்தில் 9 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் 9 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் 9 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் 9 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ADDED : ஜன 04, 2024 11:06 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிய, ஒன்பது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஒரே மாவட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைபடி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு
வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பவானி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, -கோவை மாவட்டம் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கும், அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வைரம்-, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோவை பி.என்.பாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தாமோதரன், பவானி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்னம்,-
பவானிசாகருக்கும், கோவை மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய நவநீதகிருஷ்ணன்,- ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோபியில் பணியாற்றிய சண்முகவேலு-, கோவை கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டராகவும்,
பங்களாபுதுாரில் பணியாற்றிய வடிவேல்குமார்,- கோவை தொண்டாமுத்துாருக்கும், ஈரோடு டவுன் கிரைம் இன்ஸ்பெக்டர் முருகன்,- கோவை பேரூர் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயசுதா-, வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.