/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வார இறுதி நாட்களில் 75 சிறப்பு பஸ் இயக்கம் வார இறுதி நாட்களில் 75 சிறப்பு பஸ் இயக்கம்
வார இறுதி நாட்களில் 75 சிறப்பு பஸ் இயக்கம்
வார இறுதி நாட்களில் 75 சிறப்பு பஸ் இயக்கம்
வார இறுதி நாட்களில் 75 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 04, 2025 01:03 AM
திருப்பூர், வெளியூர் செல்லும் பிற மாவட்ட பயணிகள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து, 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக வாராந்திர சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. அவ்வகையில், இன்றிரவு முதல் வரும், 6ம் தேதி இரவு வரை திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 40, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15, புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 20 என மொத்தம், 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மாலை 6:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை கூட்ட நெரிசலுக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.