/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டாஸ்மாக் கடையில் குளறுபடி 7 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' டாஸ்மாக் கடையில் குளறுபடி 7 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
டாஸ்மாக் கடையில் குளறுபடி 7 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
டாஸ்மாக் கடையில் குளறுபடி 7 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
டாஸ்மாக் கடையில் குளறுபடி 7 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 19, 2024 11:00 AM
ஈரோடு: ஈரோட்டில் டாஸ்மாக் மதுக்கடையில் முறைகேடு, மோசடியால், ஏழு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஈரோடு, கனி ராவுத்தர் குளம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு அதிகம் விற்பனை நடக்கும். இதனால் கடையில் இரு மேற்பார்வையாளர் உட்பட எட்டு பேர் வரை விற்பனையில் ஈடுபடுவர். சில மாதமாக கடைக்கு அனுப்பப்படும் மது, விற்பனை விபரம், இருப்பு விபரம் முறையாக பதிவு செய்யப்படவில்லை. விற்பனை தொகையை செலுத்துவதிலும் குழப்பம் நீடித்தது. இது தொடர்பாக ஏற்கனவே நடந்த ஆய்விலும் இருப்பு, விற்பனை, பணம் ஆகியவற்றில் தவறு இருப்பது கண்டறியப்பட்டது.
தவிர கடையில் இருந்து, இரவு, 10:00 மணி முதல் மறுநாள் மதியம், 12:00 மணி வரை விற்பனை செய்வதற்காக பல்வேறு கடைக்காரர்களும், தனி நபர்களும் மொத்தமாக மது வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அம்சவேணி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை கடையில் ஆய்வு செய்து, 2 மணி நேரம் விற்பனையை நிறுத்தினர். அப்போது மது விற்பனை, இருப்பு, கையிருப்பு பணம் ஆகியவற்றில் முரண்பாடு ஏற்பட்டு, கள்ள விற்பனைக்கு மொத்தமாக மது விற்றது தெரியவந்தது. இதனால் கடையில் பணி செய்த கதிர்வேல், கண்ணன், முருகேசன், செல்வம், தணிகாசலம், மயில், மதி என ஏழு பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது அக்கடையில் பிற பணியாளர்களை கொண்டு விற்பனை நடக்கிறது.