/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கீழ்பவானி பகுதியில் 51 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்; அமைச்சர் தகவல்கீழ்பவானி பகுதியில் 51 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்; அமைச்சர் தகவல்
கீழ்பவானி பகுதியில் 51 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்; அமைச்சர் தகவல்
கீழ்பவானி பகுதியில் 51 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்; அமைச்சர் தகவல்
கீழ்பவானி பகுதியில் 51 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்; அமைச்சர் தகவல்
ADDED : ஜன 05, 2024 10:56 AM
ஈரோடு: ''கீழ்பவானி பகுதியில், 51 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு அருகே நசியனுாரில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய (டி.பி.சி.,) திறப்பு விழா நேற்று நடந்தது. கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை நடந்து வருவதால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக நசியனுார், நாதிபாளையம், கூகலுார், புதுவள்ளியம்பாளையம், அளுக்குளி, கலிங்கியம் என ஆறு இடங்களில் திறந்து செயல்படுகிறது. மொத்தம், 51 இடங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் கூடுதல் கொள்முதல் நிலையமும் திறக்கப்படும்.
கடந்த, 2022-23 இதே பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில், 96,000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 74 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு, 96,865 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.நசியனுாரில் மட்டும் இரு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, 1,533 டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம், 230 விவசாயிகள் பயன் பெற்றனர். நடப்பு பருவத்தில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில், 35 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 24,613 டன் நெல் கொள்முதல் செய்து, 4,311 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
நடப்பு பருவத்தில் கீழ்பவானி பாசன பகுதியில் கொள்முதல் நிலையம் மூலம், 50,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பின் நசியனுாரில், 22 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், குடியிருப்பு கட்டடம் திறக்கப்பட்டது.மாவட்ட பஞ்., தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு யூனியன் தலைவர் பிரகாஷ், நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் ரமேஷ்பாபு, வேளாண் துணை இயக்குனர் முருகேஷ், சாந்தாமணி, நசியனுார் டவுன் பஞ்., தலைவர் மோகனப்பிரியா, தாசில்தார் ஜெயகுமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.