/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாவட்டத்தில் ரூ.505 கோடியில் திட்டப்பணி: காணொலியில் தொடங்கி வைத்த முதல்வர்மாவட்டத்தில் ரூ.505 கோடியில் திட்டப்பணி: காணொலியில் தொடங்கி வைத்த முதல்வர்
மாவட்டத்தில் ரூ.505 கோடியில் திட்டப்பணி: காணொலியில் தொடங்கி வைத்த முதல்வர்
மாவட்டத்தில் ரூ.505 கோடியில் திட்டப்பணி: காணொலியில் தொடங்கி வைத்த முதல்வர்
மாவட்டத்தில் ரூ.505 கோடியில் திட்டப்பணி: காணொலியில் தொடங்கி வைத்த முதல்வர்
ADDED : ஜன 06, 2024 07:28 AM
அந்தியூர்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வழங்கல் துறை சார்பில் ஈரோடு மாவட்டம் அந்தியூர், சிவகிரி, நம்பியூர், நசியனுார், கருமாண்டி செல்லிபாளையம் மற்றும் பெருந்துறை டவுன் பஞ்சாயத்துகளில் கட்டப்பட்ட வாரச்சந்தைகள்;பெருந்துறை டவுன் பஞ்சாயத்தில் புதிய நுாலகம், அறிவுசார் மையம், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 100 படுக்கை கொண்ட சிறப்பு தங்குமிடம்; மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில், 505.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு திட்டப்பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நேற்று திறந்தும், தொடங்கியும் வைத்தார். அந்தியூரில், 5.76 கோடி ரூபாய் மதிப்பில் வாரச்சந்தை வளாகம் மற்றும் வணிக வளாக கட்டடங்களும் திறக்கப்பட்டன.அந்தியூரில் இந்நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் மற்றும் அதிகாரிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு துறையையும் மேம்படுத்தும் அக்கறையோடு, முதல்வர் செயல்படுகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், தன்னை சந்திக்க வருவோர், கட்டாயமாக புத்தகம் மட்டுமே வாங்கி வர அறிவுறுத்தினார். அந்த வகையில் லட்சக்கணக்கான புத்தகங்கள் சேர்ந்தன. அவை அனைத்தும் நுாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. டெட்ரா பேக் நீதிமன்ற வழக்கு காரணமாக தான் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்பொழுது ஒரு குழு அமைத்து அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. மது கடைகளுக்கு, 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் செல்வதை தடுப்பது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆன்லைனில் மது கடைகளில் பணம் செலுத்துவது குறித்த திட்டம் தற்போது வரையில்லை.இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
இளைஞர் மேம்பாட்டு மையம் திறப்புமொடக்குறிச்சி யூனியனில், 412 கோடி ரூபாயில், 442 ஊரக குடியிருப்பு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம்; கொடுமுடி யூனியனில், 87.68 கோடி ரூபாயில், 144 குடியிருப்பு பயன் பெறும் வகையிலான கூட்டு குடிநீர் திட்டம்; கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 6.71 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இளைஞர் மேம்பாட்டு மையம், அந்தியூரில் புதிய வாரச்சந்தை உட்பட பல்வேறு பணிகளை, காணொலியில் ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஈரோடு, கருங்கல்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் வகையிலான பெரிய நுாலகம், முதல், இரண்டாம் தளங்களில் போட்டி தேர்வுகளுக்கான வகுப்புகள், கணினி மூலம் தேர்வு எழுதும் அமைப்பு ஏற்படுத்தியுள்ளனர்.