/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அதிகாரி எனக்கூறி தேங்காய் எண்ணெய் லாரி கடத்தல் பிரபல ஆயில் மில் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது அதிகாரி எனக்கூறி தேங்காய் எண்ணெய் லாரி கடத்தல் பிரபல ஆயில் மில் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது
அதிகாரி எனக்கூறி தேங்காய் எண்ணெய் லாரி கடத்தல் பிரபல ஆயில் மில் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது
அதிகாரி எனக்கூறி தேங்காய் எண்ணெய் லாரி கடத்தல் பிரபல ஆயில் மில் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது
அதிகாரி எனக்கூறி தேங்காய் எண்ணெய் லாரி கடத்தல் பிரபல ஆயில் மில் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது
ADDED : ஜூன் 14, 2025 07:14 AM
காங்கேயம்: கேரளாவை சேர்ந்தவர் லாரி உரிமையாளர் அனிபா, 45; இவர் டேங்கர் லாரிகள் மூலம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆயில் மில்லில் தேங்காய் எண்ணெயை மொத்தமாக வாங்கி, கேர-ளாவில் விற்கும் தொழில் செய்து வருகிறார்.
அனிபாவுக்கு சொந்தமான லாரி நேற்று முன்தினம் இரவு, காங்-கேயத்தில் ஒரு ஆயில் மில்லில் எண்ணெயை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. காங்கேயத்தை அடுத்த சாவடிபாளையத்தில் டிரைவர் சுரேஷ், 58, டீ குடிக்க நிறுத்தியுள்ளார். அப்போது காரில் வந்த ஐந்து பேர், தங்களை சேல்ஸ் டேக்ஸ் அதிகாரிகள் என கூறி, எண்ணெய்க்கான இன்வாய்ஸ் பில் கேட்டுள்ளனர். அவரை திசை திருப்பி, 11.5 டன் எடையுள்ள தேங்காய் எண்ணெய் லோடு லாரியை கடத்தி சென்றனர்.
காரில் வந்த கும்பல் அதிகாரிகள் இல்லை என சுதாரித்துக் கொண்டவர், காங்கேயம் போலீசில் புகாரளித்தார். விசார-ணையில் காரில் வந்த கும்பல், காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் பிரபல ஆயில் மில் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மணி அரவிந்த், ராஜசேகர், மணிகண்டன் மற்றும் மயில்சாமி என்-பதும் தெரியவந்தது. காங்கேயம் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.