/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயிலில் பெண்ணிடம் 4.5 பவுன் நகை பறிப்பு ரயிலில் பெண்ணிடம் 4.5 பவுன் நகை பறிப்பு
ரயிலில் பெண்ணிடம் 4.5 பவுன் நகை பறிப்பு
ரயிலில் பெண்ணிடம் 4.5 பவுன் நகை பறிப்பு
ரயிலில் பெண்ணிடம் 4.5 பவுன் நகை பறிப்பு
ADDED : ஜூன் 22, 2025 01:05 AM
ஈரோடு :கோவை, கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் துளசிமணி, 65; உறவினர்கள், 34 பேருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். தரிசனம் முடிந்து திருப்பதி-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தார்.
ஈரோடு காவிரி பாலத்தை தாண்டி ரயில் மெதுவாக வந்தபோது, ஜன்னலோரம் அமர்ந்து துாங்கியபடி வந்த துளசிமணியின், நாலரை பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமி ஒருவர் பறித்து கொண்டு இறங்கி தப்பி ஓடி விட்டார். புகாரின்படி ஈரோடு ரயில்வே போலீசார் ஆசாமியை தேடி வருகின்றனர்.