/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி வருகை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி வருகை
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி வருகை
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி வருகை
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி வருகை
ADDED : ஜூலை 03, 2025 01:19 AM
ஈரோடு, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, ஈரோட்டிற்கு, 2,500 டன் அரிசி மூட்டை ரயிலில் வரத்தானது.
தமிழகத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட மக்களுக்கு, பொது வினியோக திட்டத்தில் சப்ளை செய்வதிற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தெலுங்கானா மாநிலம் சரளப்பள்ளியில் இருந்து, 2,500 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.
தெலுங்கானாவில் இருந்து, 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. ரயில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட் வந்தடைந்தது. அரிசி மூட்டைகளை சுமை துாக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். அரிசி மூட்டைகள், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.