ADDED : செப் 07, 2025 12:56 AM
ஈரோடு, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் விற்பனையை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி கொங்காலம்மன் கோவில் வீதி, மஜீத் வீதி பகுதி கடைகளில், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் மளிகை கடை, காய்கறி கடை என எட்டு கடைகளில், 23 கிலோ பிளாஸ்டிக் கவரை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு, 15,100 ரூபாய் அபராதம் விதித்தனர்.