ADDED : மே 31, 2025 06:25 AM
ஈரோடு: சத்தியமங்கலத்தில் வாகனத்தில் கடத்திய, ௨.20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., மேனகா தலைமையிலான போலீசார், பறக்கும் படை தாசில்தார் ஜெயகுமார் முன்னிலையில், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு வாகனத்தில், 44 மூட்டைகளில், 2,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. வேனை ஓட்டி வந்த சத்தியமங்கலம், அரசூர், மாக்கினாங்கோம்பை சுப்பிரமணியம், 43, என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.